புதிய விஷயங்களை முயற்சி ஆய்வுக்கூடம் "இந்தியா" - பில்கேட்ஸ் சர்ச்சை பேச்சு - இந்தியர்கள் கடும் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடமாக இந்தியா விளங்குவதாக மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில்கேட்ஸ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பில்கேட்ஸ் அண்மையில் 'பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் பில்கேட்ஸ் பங்கேற்று பேசிய போது, புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடமாக இந்தியா விளங்குவதாக குறிப்பிட்டார். அங்கு நிரூபணமான பின், ஒரு விஷயத்தை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லலாம்
என்று அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பில்கேட்சின் பேச்சுக்‍கு இந்தியர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்தியர்களான நாம், பில்கேட்சுக்கு விலங்குகள் போல தெரிகிறோம் என்றும், அதனால் ஒரு புதிய விஷயத்தை நம் மீது பரிசோதிக்க அவர் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். நம் கல்வி முறை அவரை ஹீரோவாக்கி விட்டது. எப்போது விழிப்போம் என தெரியவில்லை என, பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

Night
Day