புற்றுநோய்க்கு தடுப்பூசி - இறுதிக்கட்டத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டறிவதில் ரஷ்ய விஞ்ஞானிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற வருங்காலத்திற்கான தொழில்நுட்பம் குறித்த மாநாட்டில் பேசிய அவர், ரஷ்ய அறிவியலாளர்கள் புதிய வரலாறு படைக்க உள்ளதாகவும், புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கான மருந்து மற்றும் தடுப்பூசியை கண்டறியும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் கூறினார். அந்த பணி நிறைவடைந்தால் புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபர்கள் மிகுந்த பயனடைவார்கள என்றும் தெரிவித்தார். இருப்பினும் எந்த வகையான புற்றுநோய்க்கான தடுப்பூசியை ரஷ்ய அறிவியலாளர்கள் கண்டறிய உள்ளனர், அது எவ்வாறு செயல்படும் என்பது குறித்து விளாடிமிர் புதின் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. 

Night
Day