பூமிக்கு அருகே வலம் வரும் வால் நட்சத்திரம் - வெறும் கண்களால் காண வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எவரெஸ்ட் சிகரத்தை விட மிகப்பெரிய வால் நட்சத்திரம் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. வரும் மார்ச் மாதத்தில் பூமிக்கு அருகே கடந்து செல்லும் வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்கமுடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 30 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வால் நட்சத்திரம், 71 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீள் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. வரும் நாள்களில் பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம் ஐரோப்பாவில் உள்ள இருள் சூழ்ந்த பகுதியில் இருந்து வெறும் கண்களால் பார்க்கமுடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வரும் மார்ச் 31ஆம் தேதி வால் நட்சத்திரத்தை மிகத்தெளிவாக காணமுடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day