பைக் டாக்சிகள் இயங்கலாம், விதிமீறலில் ஈடுபடக்கூடாது - தமிழக போக்குவரத்து துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பைக் டாக்சிகள் இயங்கலாம், ஆனால் விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் விதிகளை மீறினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்‍க வேண்டுமென போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பைக் டாக்சிகளுக்கு ஒருபுறம் வரவேற்பும், மறுபுறம் எதிர்ப்பும் இருந்தாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், பைக் டாக்சிகளால் ஏற்படும் விபத்துகளுக்கு நிவாரணம் மறுக்கப்படுவதாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாகவும், பைக் டாக்சிகள் விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day