போரை தவிர்க்கும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை - கிம் ஜாங் உன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென் கொரியாவை முதன்மை எதிரி என குறிப்பிட்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது நாட்டில் செயல்பட்ட நட்புறவு ஏற்படுத்தும் குழுவை கலைத்துள்ளார். போரை தவிர்க்கும் திட்டம் எதுவும் தமக்கு இல்லை என தெரிவித்துள்ள கிம் ஜாங் உன், தங்கள் எல்லையில் மில்லி மீட்டருக்கு குறைவான நிலத்தை கூட தென் கொரியா அத்துமீற அனுமதிக்கமுடியாது என்றார். வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி வந்த மூன்று குழுக்களையும் கிம் ஜாங் உன் கலைத்து உத்தரவிட்டதால் தென் கொரியா கலக்கம் அடைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தென் கொரியா கடல் எல்லைக்குள் வட கொரியா ஏவுகணையை செலுத்தி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day