எழுத்தின் அளவு: அ+ அ- அ
இஸ்ரேலுக்கு எதிரான போர் நிறுத்தம் செய்ய தயார் என்று ஹமாஸ் அமைப்பினர் அறிவித்து உள்ளனர்.
காசாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் திரும்ப பெறுவதற்கு ஈடாக, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய 7 மாதங்களாக நடந்து வரும் மோதலில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்ததாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஒன்றை எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து முன்மொழிந்தன. இதனை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஏற்று கொண்டுள்ளது. போர்நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்து உள்ளது. இந்த அறிவிப்பால் பாலஸ்தீனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி இஸ்ரேல் இதுவரை எந்தக்கருத்தையும் தெரிவிக்கவில்லை.