போர் பதற்றம் - ஈரான், இஸ்ரேல் பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஆதரவு அமைப்புகள் களமிறங்கி உள்ளதால் இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் உருவாகி உள்ளது.  சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரக வளாகம் குண்டுவீசி தகர்க்கப்பட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால், இஸ்ரேலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும், கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, "இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டும், என்றும் இந்த தாக்குதல்  நிச்சயம் நடக்கும்  ஈரானிய உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதனிடையே, இஸ்ரேல் மீது ஈரான் போர் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய வெளிப்புறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Night
Day