மத்திய கிழக்கில் வன்முறைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது - அன்டோனியா குட்ரெஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியா குட்ரெஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும் வன்முறையை நிறுத்துமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, நாளுக்கு நாள் மோதல் நீடித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், அன்டோனியா குட்ரெஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், கடந்த 24 மணி நேரத்தில் பெய்ரூட்டில் நடந்த சம்பவங்களால் தான் மிகவும் கவலைப்படுவதாகவும், மேலும் இந்த வன்முறை சுழற்சியை அனைத்து தரப்பினரும் நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

Night
Day