மனித மூளையில் சிப்பை பொருத்தி எலான் மஸ்க்கின் நியூராலிங்க் சாதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் முதன் முறையாக மனித மூளையில் வெற்றிகரமாக சிப் பொருத்தியுள்ளது. மூளைக்கும், கணினிகளுக்கும் இடையேயான நேரடி தொடர்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு கடந்த 2016ம் ஆண்டு நியூரோலிங்க் நிறுவப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு மூளை சிப்புகளை குரங்கு மற்றும் பன்றியில் பொருத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகள் வெற்றியை தந்த நிலையில் மனித மூளையில் சிப்பை பொருத்தும் நடவடிக்கைகள் தொடங்கின. இந்நிலையில் முதன் முறையாக மனித மூளையில் சிப் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த எலான் மஸ்க், நோயால் பாதிக்கப்பட்ட அந்த நபர் சிப் பொருத்தப்பட்டபின் விரைந்து குணமாகி வருவதாக தெரிவித்தார். நியூராலிங்க்கின் சிப் தொழில்நுட்பம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்து, அவர்களது உணர்வுகள் வெளியுலகை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day