மாணவர்களுக்கு வழங்கும் விசா திட்டத்தை நிறுத்தியது கனட அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச மாணவர்களுக்கு வழங்கி வந்த நேரடி விரைவு விசா திட்டத்தை கனடா அரசு நிறுத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி பயில விரைவாக விசா வழங்கும் பொருட்டு இந்த திட்டத்தை கனடா அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் விரைவாக விசா வழங்கப்பட்டது. பல நாடுகளில் இருந்து லட்சக்‍கணக்‍கான மாணவர்கள் கனடாவுக்கு கல்வி பயில சென்ற நிலையில் அங்கு வீடு பிரச்சனை, செலவு, சுகாதார பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சர்வதேச மாணவர்கள் வருவதை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த மாணவர் விசா திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படிக்க விசா பெறுவதற்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Night
Day