மார்சேல்ஸ் நகரில் இந்திய துணை தூதரகம் திறப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் இமானுவேல் மேக்ரோனுடன் இணைந்து மார்சேயில் இந்திய துணை தூதரகத்தை திறந்து வைத்தார். பிரான்ஸ் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுடன் தெற்கு பிரான்சில் உள்ள மார்சே சென்றடைந்தார். அங்கு பிரிட்டிஷ் கப்பலில் தப்பிக்க முயன்ற சுதந்திரப் போராட்ட வீரர் வி.டி. சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்குள்ள இந்திய சமூக மக்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் போரிட்டு இறந்த இந்திய வீரர்களின் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் மசார்குஸ் போர் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மார்சேயில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமர் மோடியும் மேக்ரோனும் இணைந்து திறந்து வைத்தனர்.

Night
Day