மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்கத் தீர்மானம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாலத்தீவில் சீன சார்பு அதிபரான மொகமத் முஸ்சுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சியான  மாலத்தீவு ஜனநாயகக் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சீன உளவுக் கப்பலை மாலேயில் நிறுத்துவதற்கு அரசும் அனுமதி வழங்கியதை அடுத்து, எதிர்க்கட்சிகள் இம்முடிவை எடுத்துள்ளன.  மாலத்தீவு ஜனநாயகக் கட்சி முய்சுவின் பதவி நீக்கத் தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கான கையெழுத்து சேகரிப்பை தொடங்கி விட்டதுது. நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மிகப்பு பெரிய கைகலப்பு நடைபெற்ற நிலையில் தற்போது அதிபருக்கு எதிரான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. இந்தியாவுடனான உறவிற்கு எதிராக குரல் கொடுத்த முய்சு தற்போது கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Night
Day