மாலத்தீவு : ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே கடும் மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களும், எதிர்க்கட்சி எம்பிக்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மாலத்தீவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முகமது முய்சு அதிபராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் புதிதாக  நியமிக்கப்பட்டுள்ள 4 அமைச்சர்களுக்கு  ஒப்புதல் பெறும் நோக்கத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் புதிய அமைச்சர்கள் நியமனத்திற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பு எம்.பிக்களுக்கும் இடையே மோதல் வெடித்து அவையே களேபரமானது.

Night
Day