எழுத்தின் அளவு: அ+ அ- அ
மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
மியான்மரின் மத்திய பகுதியில் காலை 11.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவை உணரப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இவை, 7 புள்ளி 7 மற்றும் 6 புள்ளி 4 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நிலநடுக்கத்தால் மியான்மரில் உள்ள பாலம் ஒன்றும், வீடுகளும் சேதமடைந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த் நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டது. இதில் பல அடி கட்டடம் ஒன்று தரைமட்டமாகும் காட்சிகள் இணையத்தில் வைராகி வருகிறது.
மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அதிக உயிர்சேதத்திற்கு வாய்ப்புள்ளதாகூறுக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். மேலும், இந்த நிலநடுக்கம் இந்தியாவின் மணிப்பூரிலும், வங்கதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.