மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் நாடு கடத்தப்படுகிறார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2008 மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பியோடிய மேலும் சிலரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரான அர்ஷ்தீப் சிங் கில் அலியா அர்ஷ் டல்லா, லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய், வங்கிக் கடன் மோசடியில் தப்பியோடி இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி,  வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஆயுத ஒப்பந்த ஆலோசகர் சஞ்சய் பண்டாரி, துபாயில் கைது செய்யப்பட்ட மகாதேவ் பந்தய செயலியின் சவுரப் சந்திரகர் உள்ளிட்டோரையும் இந்தியாவுக்கு கொண் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Night
Day