மேற்குலக நாடுகளின் தாமத உதவியே உக்ரைனின் இழப்புகளுக்கு காரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உறுதியளித்தபடி உரிய நேரத்தில் மேற்குலகம் ஆயுத உதவிகள் வழங்காததே, அதிக எண்ணிக்கையிலான உக்ரைன் வீரர்கள் உயிரிழப்புக்குக் காரணம் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஸ்தான் உமெரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.  தலைநகா் கீவில் நடைபெற்ற ‘உக்ரைன்-2024’ கருத்தரங்கில் உரையாற்றிய அவர், மேற்குலக நாடுகளிடம் இருந்து கிடைத்த ஒவ்வொரு தாமதமான உதவியும் உக்ரைன் படைகளின் இழப்புகளை அதிகரித்தது என்றார். ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தொடா்ந்து போரிட வேண்டும் என்றால் மேற்குலக நாடுகள் கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்காததால் வீரர்கள் மற்றும் நிலப்பரப்பை தொடர்ந்து இழந்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

Night
Day