மைக்ரோசாப்ட் விண்டோஸ் : புதிய தலைவர் முன்னாள் சென்னை ஐஐடி மாணவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஐஐடி-யில் படித்த பவன் டவுலூரி என்ற முன்னாள் மாணவர் மைக்ரோசாப்ட் விண்டோஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 23 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பவன், சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர் ஆவார். இதற்கு முன்னர் பதவியில் இருந்த பனோஸ் பனாய் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அதனை பவன் டலூரிக்கு வழங்கப்பட்டது. தற்போது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸின் ஆகிய இருபெறும் துறைகளுக்கு பவன் டலூரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியர்கள் பட்டியலில் பவன் டலூரி இணைந்துள்ளார்.

varient
Night
Day