யூரோபாவில் விரைவில் ஆய்வு செய்ய அமெரிக்‍காவின் நாசா ஆய்வு மையம் முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கோளின் சந்திரனில் கூடுதல் நிலப்பரப்பு உள்ளது பற்றி ஆராய அமெரிக்‍காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது. வியாழன் கோளை சுற்றி 95 சந்திரன்கள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்‍கிறது. தி கிளிப்பர் விண்கலம் வியாழனின் மிகப்பெரிய சந்திரனான யூரோபாவை ஆராய விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டும் தனியாக உள்ளதா என்பதை ஆராய விரும்புவதாக வியாழன் கோள் ஆய்வு திட்ட விஞ்ஞானி பாப் பப்பாலர்டோ தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக்‍காக 41 ஆயிரத்து 702 கோடி ரூபாய் நாசா ஓதுக்‍கீடு செய்துள்ளது. இதற்காக கலிபோர்னியாவில் தனி ஆய்வகம் அமைக்‍கப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் ஸ்பேஸ் எக்‍ஸ் ராக்‍கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் இந்த விண்கலம் செவ்வாய் கோளை கடந்த பிறகு விரைவாக ​வியாழனின் துணைக்‍கோளை நோக்‍கி செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

Night
Day