ரஃபா நகர எல்லையை ஒட்டி திடீரென சுவர் எழுப்பும் எகிப்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலஸ்தீன அகதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக, ரஃபா நகர எல்லையை ஒட்டிய பகுதியில் எகிப்து சார்பில் சுவர் கட்டப்பட்டு வருகிறது. காசாவின் மேற்கு எல்லையில் ஷேக் ஜூவைத் - ராபா நகரங்களை இணைக்கும் சாலையையொட்டி 3.5 கிலோமீட்டர் தொலைவுக்கு சுவர் கட்டுமானம் நடைபெற்று வருகின்ற செயற்கை கோள் படங்களை மேக்ஸர் டெக்னாலஜீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இருப்பினும், சுவர் எழுப்பி வருவது குறித்து எகிப்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. காசாவில் இஸ்ரேல் போரை விரிவுப்படுத்தினால், ராபாவில் தஞ்சம் அடைந்துள்ள லட்சக்கணக்கான மக்கள் எகிப்து எல்லைக்குள் நுழையும் அபாயம் நிலவுவதால், இந்த சுவர் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Night
Day