ரத்தக் காயத்துடன் விற்பனைக்கு வந்த ட்ரம்ப் "டி-ஷர்ட்"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துப்பாக்கிச்சூடு என்னை வலிமையாக்குகிறது என்ற வாசகத்துடன் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் டி-ஷர்ட்டுகள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.

டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே, ரத்தம் தோய்ந்த முகத்துடன் கை முஷ்டியை உயர்த்திக் காட்டியபடி டிரம்ப் இருக்கும் டி-சர்ட்டுகள் இணையத்தில் வைரலானது. தாக்குதல் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள், அலிபாபாவுக்குச் சொந்தமான பிரபலமான சீன ஈ-காமர்ஸ் தளமான தாவோபாவில் முதல் தொகுதி டி-ஷர்ட்கள் விற்பனைக்கு வந்தன. இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதால், அவருக்கு நினைவு பரிசாக மட்டுமே இதனைத் செய்ததாகவும் மேலும் அவர் சீன நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானவர் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Night
Day