ரயில் கடத்தல் - இந்தியாவுக்கு தொடர்பு - பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்த மத்திய அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பலுசிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்துக்கு, இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பது முழு உலகமும் அறியும் எனவும் கூறினார். உள்நாட்டு பிரச்னைகளுக்காக மற்ற நாடுகள் மீது பழி சுமத்துவதை தவிர்த்துவிட்டு, அதனை சமாளிப்பது குறித்து பாகிஸ்தான் யோசிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Night
Day