ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 70 பேர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 70 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோமி மாகாணத்தில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் இன்டா நகர் அருகே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், ரயிலில் பயணித்த 70 பேர் காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Night
Day