ரஷியாவில் வானவில் நிறத்தில் கம்மல் அணிந்த பெண்ணுக்கு 5 நாட்கள் சிறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷியாவில் தன்பாலின ஈர்ப்பை குறிக்கும் வானவில் நிறத்தில் கம்மல் அணிந்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் அதன் ஆதரவு செயல்பாடுகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும், தன்பாலின ஈர்ப்பை ஆதரிக்கும் வகையிலான வானவில் நிற கொடி, அது தொடர்பான பொருட்கள், புகைப்படங்களையும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷியாவின் நிஸ்னி நவ்ஹொராட் பகுதியை சேர்ந்த அனஸ்டசியா எர்ஷொவா என்ற பெண் பொது இடத்தில் வானவில் நிறத்திலான கம்மல் அணிந்துள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவருக்கு, 5 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day