ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கள் பதிலளித்துள்ளார். ஜெர்மனி தலைநகர் முனிச்சில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். அங்கு, நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறதா என மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, பதிலளித்தவர் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் திறமை தங்களிடம் உள்ளது என்றும், அதற்கு நீங்கள் பாராட்ட வேண்டுமே தவிர விமர்சனம் செய்யக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார். 

Night
Day