ரஷ்யாவுடன் சேர்ந்து போரிட்ட வடகொரிய ராணுவ வீரர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 ரஷ்ய ராணுவத்துடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக போரிட்ட 2 வடகொரிய ராணுவ வீரர்களை பிடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு உதவுவதற்காக வடகொரியா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை அனுப்பியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ரஷியாவுக்காக போரிட்ட வடகொரியா வீரர்கள் இருவரை பிடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதில் ஒருவருக்கு தாடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றொருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார். வடகொரிய ராணுவ வீரர்கள் பிடிபட்டுள்ளதை தென்கொரியாவும் உறுதி செய்துள்ளது.

Night
Day