ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததால் இரு நாடுகளிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய ராணுவம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் ரில்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

Night
Day