ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 2030ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அதிகாரத்தை நிலை நாட்டும் வகையில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதிபர் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், நாடு முழுவதும் வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சர்வதேச சட்டங்களை மீறி 2022ஆம் ஆண்டு ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. விளாடிமிர் புதினை எதிர்த்து ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும், நிகோலே கேரிடோனோவ் இம்முறையும் போட்டியிடுகிறார். முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு, 2036 ஆம் ஆண்டு வரை அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதற்காக சட்டத்திருத்தத்தில் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

Night
Day