ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவின் வான்வழி அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக, இந்தியா - ரஷ்யா இடையே சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பில் அதிநவீன ரேடார் கருவி தொடர்பான ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 

3 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பயணத்தின்போது ரஷ்யா உடன் சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பில் அதிநவீன ரேடார் கருவி தொடர்பான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், இக்கருவி சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இயங்கக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள், போர் விமானங்கள் உள்ளிட்டவைகளை முன்கூட்டியே கண்டறியும் திறன்கொண்டது என கூறப்படுகிறது.

Night
Day