ரஷ்ய ஆயுதங்களின் 60% உதிரிபாகங்கள் சீனாவில் தயாரானவை - உக்ரைன் அதிபர் ஆலோசகர் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யா போரில் பயன்படுத்திவரும் ஆயுதங்களின் உதிரிப் பாகங்களில் 60 சதவீதம் சீனாவில் தயாரானவை என்று உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.


ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்றுவரும் போர், தற்போது தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் கண்டெடுக்கப்பட்ட ரஷ்ய ஆயுதங்களில் உள்ள உதிரிபாகங்களில் 60 சதவீதம் சீனாவில் தயாரானவை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் விளாடிஸ்லாவ் விளாசியுக் தெரிவித்துள்ளார். குறிப்பாக ட்ரோன்கள், ஏவுகணைகள், கண்காணிப்பு கருவிகள் போன்றவற்றில் சீனாவில் தயாரிக்கப்பட்ட உதிரிப் பாகங்களை ரஷ்யா பயன்படுத்தி வருவதாக கூறியுள்ள அவர், சில உதிரிபாகங்கள் அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான், ஸ்விட்சர்வாந்து மேலும் சில மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விஷயத்தில் சீனா மிகப் பெரிய பிரச்னையாக உள்ளதாகவும் விளாசியுக் தெரிவித்தார்.

Night
Day