ரஷ்ய ட்ரோனை குச்சி வைத்து வீழ்த்திய உக்ரைன் ட்ரோன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைனின் ஆளில்லா விமான ரஷ்யாவின் ஆளில்லா விமானத்தை குச்சி வைத்து வீழ்த்திய காட்சி வெளியாகியுள்ளது. உக்ரேனிய ராணுவத்தால் செலுத்தப்பட்ட ட்ரோனில் குச்சி ஒன்று பொருத்தப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது கீழே இருந்து எழுப்பப்பட்ட ரஷ்யாவின் ட்ரோன் உக்ரைன் ட்ரோனை நெருங்கும் போது, ட்ரோனில் பொருத்தப்பட்ட குச்சியால் தாக்கப்பட்டு கீழே விழுந்தது. உக்ரைன் ட்ரோனில் பதிவான இக்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே நவீன யுத்தத்துக்கு இது போன்ற பழமையான கருவிகள் தேவைப்படுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Night
Day