ராணுவ அவசரநிலை அறிவித்த அதிபர் யூன் சுக் இயோல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்கொரியாவில் ராணுவ அவசரநிலை அறிவித்த அதிபர் யூன் சுக் இயோல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 


கடந்த வாரம் தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிரகடனத்தை அறிவித்த அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவசர நிலை கைவிடப்பட்டது. அவசரநிலை அமல்படுத்தியதற்காக நாட்டு மக்களிடம் அதிபர் மன்னிப்பு கோரிய நிலையில், அவர் மீது விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால், யூன் சுக் இயோல் தப்பிச் செல்லாமல் இருக்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Night
Day