லீப் தினத்தையொட்டி சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. பூமி தன்னைதானே சுற்றிக் கொண்டு சூரியனை சுற்றி வரும்போது, ஒரு சுற்றை நிறைவு செய்ய 365 நாட்கள் 5 மணி நேரம், 48 நிமிடங்கள், 46 விநாடிகள் எடுத்து கொள்கிறது. இருப்பினும் நாம் ஒரு ஆண்டை 365 நாட்களாகவே கணக்கில் எடுத்து கொள்கிறோம். இருப்பினும் எஞ்சியுள்ள சுமார் 6 மணி நேரம் சேர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் கூடுதலாக வரும் போது, அந்த ஆண்டு லீப் வருடமாக கருதப்படுகிறது. நடப்பாண்டில் வந்துள்ள லீப் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் தனது தேடுபொறியில் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அதில், தாமரை குளத்தில் இலைகளுடன் தவளை உள்ளது போன்ற அமைப்பில் இன்றைய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. 

Night
Day