லேசர் ஆயுதம் மூலம் எதிரிகளின் ட்ரோன்களை தாக்கும் சோதனை முயற்சியில் வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகிலேயே முதல் முறையாக லேசர் மூலம் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எதிரிகளின் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் புதிய ட்ராகன் ஃபயர் ஆயுதத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

லேசர் மூலம் எதிரிகளின் இலக்கை தாக்கும் டிராகன் ஃபையர் என்ற சோதனையை ஐரோப்பிய பாதுகாப்பு துறை விஞ்ஞானிகள் நிகழ்த்தி உள்ளனர். ஐரோப்பிய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்லாக விளங்கும் இச்சோதனையில் எவ்வளவு தூரம் வரை லேசர் ஆயுதம் தாக்கும் என்ற விவரத்தை வெளியிடாத விஞ்ஞானிகள், சோதனையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த காசு ஒன்றின் மீது 10 விநாடிகளிலேயே துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த லேசர் ஆயுத தாக்குதல் எதிரி நாட்டு ட்ரோன்களை எளிதில் வீழ்த்த முடியும் என ஐரோப்பிய பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஏவுகணை அனுப்பி எதிரி நாட்டு ட்ரோன்களை வீழ்த்துவதற்கு பதில் குறைந்த செலவில் லேசர் தாக்குதல் மூலம் எதிரிகளின் ட்ரோன்களை வீழ்த்திவிடலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்தில் உள்ள ஹெர்ப்ரைட்ஸ் பகுதியில் கடந்த ஜனவரி மாதமே லேசர் தாக்குதல் வெற்றி கரமாக நிகழ்த்தப்பட்டதாக கூறிய ஐரோப்பிய பாதுகாப்புத்துறை செயலர் கிராண்ட் ஷாப்ஸ், முதல் முறையாக லேசர் தாக்குதலில் சாதனை படைத்த ட்ராகன் ஃபயர் ஆயுதம் ராணுவ மற்றும் கடற்படையில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்....

Night
Day