வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்துடன் பணியாற்ற அமெரிக்கா விருப்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று ராணுவத்தின் தலைமையில் இடைக்கால அரச அமையவுள்ளது. இதனையடுத்து, வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், வங்கதேசத்தில் அமையவுள்ள இடைக்கால அரசாங்கம் வன்முறையை கட்டுப்படுத்தும் என நாங்கள் நம்புவதாகவும், மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஆட்சியை நடத்த வேண்டும் எனவும் கூறினார்.

Night
Day