வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் - டொனால்ட் டிரம்ப் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தீபாவளியையொட்டி இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள அவர், அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை கமலா ஹாரிசும், ஜோ பைடனும் புறக்கணிப்பதாகவும், அமெரிக்காவில் இந்துக்களை பாதுகாப்பதோடு, அவர்களுக்கு எதிரான நிறவெறி தாக்குதலை தடுத்து நிறுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார். தனது சிறந்த நண்பர் மோடியுடன் இணைந்து இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவேன் என கூறியுள்ள டிரம்ப், அதிக வரி மற்றும் விதிமுறைகளை உருவாக்கி சிறு தொழில்களை கமலா ஹாரீஸ் அழித்து விட்டதாகவும் விமர்சித்தார். 

Night
Day