உலகம்
கயானா சென்றார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு...
கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்?...
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை ஒபைதுல் ஹூசைன் ராஜினாமா செய்துள்ளள்க தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் போராட்டக்காரர்கள் டாக்காவில் இருக்கும் உச்சநீதிமன்றத்தை சுற்றி வளைத்து இன்னும் 1 மணி நேரத்தில் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹூசைன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து தலைமை நீதிபதி உச்சநீதிமன்றத்தில் இருந்து ரகசியமாக தப்பியோடினார். போராட்டக்காரர்கள் கெடு விதித்ததை அடுத்து, தலைமை நீதிபதி பதவியை ஒபைதுல் ஹூசைன் ராஜினாமா செய்தார். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளராக கருதப்படுபவர் ஒபைதுல் ஹூசைன். இவரை வங்கதேசம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஷேக் ஹசீனா நியமித்தார். இதன் காரணமாகவே போராட்டக்காரர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தாக கூறப்படுகிறது.
கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்?...
ஒசூரில் வழக்கறிஞர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் -சென்னை ச...