வங்கதேசம் : மாணவர்கள் அனைவரும் விடுதலை - ஷஹாபுதீன் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், ராணுவத்தின் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்படுவதாகவும் இடைக்கால அரசின் பிரதமராக சலிமுலா கான் செயல்படுவார் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் முகமது ஷஹாபுதீன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ராணுவ தளபதி  வாக்கர்-உஸ்-ஜமான், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர் மற்றும் பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறையில் உள்ள முன்னாள்  பிரதமர் கலிதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய முடிவெடுக்கப்பட்டது. மேலும் மாணவர் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து ஜனவரி 2024-ல் தேர்தலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைப்பதாகவும் அதிபர் அறிவித்தார்.


Night
Day