வங்கதேசம் : முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று இரவு பதவியேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று இரவு பதவியேற்க உள்ளதாக ராணுவ தளபதி வகார் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இடைக்கால அரசு அமைக்கப்படுகிறது. இடைக்கால அரசின் தலைவராக நேபால் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுசை, வங்கதேச அதிபர் நியமித்துள்ளார். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால இரசு, தலைநகர் டாக்காவில் இன்று இரவு 8 மணிக்கு பதவியேற்கும் என்று தெரிவித்துள்ள ராணுவ தளவதி வகார் உஸ் ஜமான், இடைக்கால அரசில் முதல் கட்டமாக 15 பேர் இடம் பெறுவார்கள் என்று தெரிவித்தார். தற்போது பாரிசில் வசித்துவரும் முகமது யூனுஸ், இன்று பிற்பகல் டாக்கா வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Night
Day