வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடகொரியா 5 நாட்களுக்‍குள் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் இணைந்து கடந்த சில நாட்களுக்குமுன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவின் ஜங்யாங் நகரில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி 10 நிமிட இடைவெளியில் 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன. முதல் ஏவுகணை கடலில் விழந்ததாகவும், இரண்டாவது ஏவுகணை வடகொரிய நிலப்பரப்பிற்குள்ளேயே விழுந்ததாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியா கடந்த 26ம் தேதி ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் 5 நாட்களுக்குள் 2வது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் கொரீய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்‍கிறது.

Night
Day