வடகொரியா அனுப்பிய குப்பை பலூன்களால் தென்கொரிய விமான நிலையம் மூடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடகொரியா அனுப்பிய குப்பை பலூன்களால் தென்கொரிய விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. வடகொரியாவிலிருந்து கடந்த 9ம் தேதி 300க்கும் மேற்பட்ட குப்பை பலூன்கள் தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து, தென்கொரியா அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கி மூலம் ஒலி மாசு ஏற்படுத்தியது. இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை தென்கொரிய செயற்பாட்டாளர்கள் வடகொரியாவுக்கு எதிரான வாசங்கள் அடங்கிய பலூன்களை எல்லை தாண்டி அனுப்பினர். இந்நிலையில், வடகொரியா 100க்கும் மேற்பட்ட குப்பை பலூன்களை அனுப்பியது. அந்த, குப்பை பலூன்கள் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை மற்றும் விமான நிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விழுந்தன. இதனால், சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக தென்கொரிய விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Night
Day