வனுவாடூ தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடூ தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. 

தென் பசிபிக் கடலில் உள்ள இந்த தீவின் போர்ட் விலா பகுதியில் இருந்து மேற்கு திசையில் 30 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 57 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக வனுவாடூ தீவில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day