வரும் நாட்களிலும் கூகுளில் ஆட்குறைப்புத் தொடரும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் நாட்களிலும் ஆட்குறைப்புத் தொடரும் என கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளது அந்நிறுவனப் பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிக செலவு, நிதி நெருக்கடி எனப் பல்வேறு காரணங்களைக் கூறி கடந்த 2023 ஜனவரியில் மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது. தற்போது நடப்பாண்டு ஜனவரியிலும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்தநிலையில் பணியாளர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேவைப்படாத சில பணிகள்  நீக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இது ஆட்குறைப்புக்கான மறைமுக அறிவிப்பு எனப் பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Night
Day