வரும் மே மாதத்திற்குள் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தினர் வெளியேற வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தினர் வரும் மே மாதத்திற்குள் வெளியேற வேண்டுமென அந்நாட்டு அதிபர் முகமது முய்சு கெடு விதித்துள்ளார். மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்சு பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. தேர்தல் வாக்குறுதியாக இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்ற முடிவில் அதிபர் முகமது முய்சு உறுதியாக இருந்து வருகிறார். இவ்விகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில், வரும் மார்ச் 10 தேதி முதற்கட்டமாக ஒரு பகுதி ராணுவனத்தினரும், மே மாதம் 10ம் தேதி மீதமுள்ள ராணுவத்தினரும் வெளியேறுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day