வரும் 21-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

3 நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி வரும் 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார். வரும் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அமெரிக்காவில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முக்கியமாக அமெரிக்காவின் டெல்வாரா நகரில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இடம் பெற்றுள்ளன. 22ம் தேதி நியூயார்க்கில் இந்திய வம்சாவளி மக்களுடன் உரையாடுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார். 23ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத்தில் உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் பிரதமர் மோடி, பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுகிறார். 

Night
Day