வறட்சியின் பேரழிவு நிலையை அறிவித்த ஜிம்பாப்வே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வறட்சியின் பேரழிவு நிலையை ஜிம்பாப்வே அரசு அறிவித்துள்ளது. தற்போது ஜிம்பாப்வே, மலாவி, தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், அந்நாட்டு மக்கள் மிகவும் அவதியுற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஜிம்பாப்வே நாட்டில், பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் கருகியதாகவும், இயல்பைவிட மழை பொழிவின் தாக்கம் கடுமையாக சரிந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் எமர்சன் தெரிவித்துள்ளார். மேலும் உணவின்றி மக்கள் தவிக்கும் நிலை உள்ளதாகவும், இதனை உடனடியாக சமாளிக்க, 2 பில்லியன் டாலர் நிவாரண உதவி தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சியின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், வறட்சியின் பேரழிவு நிலையை அறிவிப்பதாக அதிபர் எமர்சன் கூறினார்.

varient
Night
Day