வாரத்துக்‍கு 4 நாள் வேலை முறைக்‍கு மாறி வரும் வளர்ந்த நாடுகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெர்மனியில் இன்று முதல் வாரத்துக்கு 4 நாள் வேலை முறை சோதனை அடிப்படையில் 45 நிறுவனங்களில் செயல்படுத்தப்படுகிறது. 

வாரம் 4 நாள் வேலை முறையால் உற்பத்தி திறன் மேம்படுகிறதா?, அதன் பொருளாதார விளைவு போன்றவை ஆராயப்படுகிறது. இன்று முதல் 6 மாதங்களுக்கு வாரம் 4 நாள் வேலை முறையை செயல்படுத்தி அதன் விளைவுகளை ஆராய ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் வாரத்துக்கு 4 வேலை நாட்கள் முறைக்கு படிப்படியாக மாறி வருகின்றன.  ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து, பெல்ஜியம், அயர்லாந்து, ஸ்பெயின், கனடா, ஸ்வீடன் நாடுகளில் வாரம் 4 நாள் வேலை அமல்படுத்தப்பட்டுள்ளது. டென்மார்க், யு.ஏ.இ, பின்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்திலும் வாரம் 4 நாள் வேலை முறை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Night
Day