எழுத்தின் அளவு: அ+ அ- அ
பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி , பிளாட்டினம் போன்ற உலோகங்களுடன் விண்வெளியில் மிதக்கும்
சைக்கி 16 என்ற சிறுகோளை ஆராய நாசா முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.
சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட மோதலில் பல சிறுகோள்கள் பெரிய கோள்களில் இருந்து பிரிந்து உருவாகி மிதக்கத் தொடங்கின. அப்படி உருவான சைக்கி 16 எனும் சிறுகோள் 1852இல் அன்னிபாலே டி காஸ்பரிஸ் எனும் இத்தாலிய வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. 200 கிலோ மீட்டர் அகலம் கொண்ட சைக்கி 16 என்ற சிறு கோள் உண்மையில், தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட பல அரிய வகை உலோகங்கள் போன்றவற்றால் ஆன ஒரு பெரிய விண்வெளிப் பாறை. இந்தச் சிறுகோளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 750 கோடி கோடிக்கு மேல் என்று நாசா மதிப்பிட்டுள்ளது. நாசாவின் கூற்றுப்படி, செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களின் சுற்றுப்பாதை இடையே இந்த சைக்கி 16 என்ற சிறுகோள் பூமியிலிருந்து 32 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.