விண்வெளியில் அந்தரத்தில் தொங்கியபடி ஆய்வு மைய பழுது நீக்‍கும் சீன வீரர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பூமிக்‍கு மே​லே அந்தரத்தில் தொங்கியபடி சீன விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்பட்ட பழுதை இயந்திர கையின் உதவியுடன் ​சரி செய்யும் வீடியோ காண்போரை வியக்‍க வைத்துள்ளது.
 
விண்வெளி ஆராய்ச்சி துறையில் முன்னணி நாடுகளில் ஒன்றான சீனா தனியாக விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை உருவாக்‍கி வருகிறது. டியாங்காங் விண்வெளி ஆய்வு மையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வு மையத்தில் தங்கி உள்ள சீன விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் நடந்து சென்று ஆய்வு மையத்தில் ஏற்பட்ட பழுதை இயந்திர கை உதவியுடன் சீரமைக்‍கிறார். அப்போது 
பூமி தனது சுற்றுப்பாதையில் சுழன்று செல்வதையும் பூமியில் உள்ள கடல் மற்றும் நிலப்பரப்புகளையும் சீன விண்வெளி ஆய்வு மைய கேமிரா துல்லியமாக படம் பிடித்துள்ளது. சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட இந்தக்‍காட்சிகள் காண்போரை வியக்‍க வைத்துள்ளது.

Night
Day