விண்வெளியில் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்...! பதற்றத்தில் NASA...!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் குழு பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்க ஸ்பேக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்கிடம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் உதவி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் என்ன சிக்கில்? சர்வதேச விண்வெளி மையத்தில் என்ன பிரச்சனை? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த 5ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டு சென்றார். அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் கடந்த 7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். 

இருவரும் விண்வெளியில் ஒரு வாரம் தங்கி சில பணிகளை முடித்துவிட்டு ஜூன் 13 ஆம் தேதிக்கு பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அன்று திட்டமிட்ட படி பூமி திரும்பும் நடவடிக்கை  தொடங்கியபோது ஸ்டார்லைனர் விண்கலத்தில் திரஸ்டர் பிரச்சனை கண்டறியப்பட்டது. அதனால், இருவரும் பூமி திரும்பும் நடவடிக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அந்த திரஸ்டர் கோளாறை சரி செய்யும் பணி தொடங்கி நடைபெற்றபோது, ஸ்டார்லைனர் விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கும் டாக்கிங் சிஸ்டத்தில் பல இடங்களில் ஹீலியம் வாயு கசிவு கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனால், பயணத்திட்டம் திடீரென 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த தேதியிலும் அவர்கள் புறப்படவில்லை. 

இந்நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் உள்ள கோளாறுகளை சரி செய்யும் பணிகளை நாசாவும் போயிங் நிறுவனமும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் நாசா சார்பில் உதவி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
அதன்படி, புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பயன்படுத்தும் டிராகண் விண்கலத்தை பயன்படுத்தி சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்டார் லைனர் விண்கலம் 45 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைந்து இருக்கும் திறன்கொண்டதாக உள்ள நிலையில், அதன் ஆன்பேர்டு கணினியில் மாற்றம் செய்வதன் மூலம் அதை 75 நாட்களாக அதிகரிக்க முடியும் என்று போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் எந்திரகோளாறுகளை சரி செய்ய கூடுதல் கால அவகாசம் கிடைக்கும் எனவும் போயிங் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், ஒரு வாரம் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவதற்கு கால தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

சரியான திட்டமிடல் இல்லாமல் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட போயிங் நிறுவனத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருவாரம் பயணமாக தொடங்கிய சுனிதா வில்லியம்ஸ்சின் விண்வெளி பயணம், 22 நாட்களை கடந்துள்ள நிலையி, அவரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 

Night
Day