விண்வெளியில் விவசாயம் செய்யும் சுனிதா வில்லியம்ஸ்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விண்வெளியில் தஞ்சமடைந்துள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விவசாயம் தொடர்பான பரிசோதனையை முன்னெடுத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 


கடந்தாண்டு ஜூன் மாதம் விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்,  பூமிக்கு திரும்ப முடியாமல், சர்வதேச விண்வெளி மையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்பதற்கு நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சர்வதேச விண்வெளியில் மைக்ரோ கிராவிட்டியில் கீரை வளர்ப்பதற்கான பரிசோதனையை சுனிதா வில்லியம்ஸ் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு நீர் நிலைகளின் கீழ் ரோமெய்ன் கீரையை பயிரிட்டுள்ள சுனிதா, விண்வெளியில் காய்கறிகளின் வளர்ச்சி முறைகள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்ய இதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Night
Day